திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24ம் தேதி காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பெரியசாமி, சேகர் பாபு, சக்கரபாணி, ஆதீனங்கள், நீதிபதிகள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம், ஆன்மீக பாடல்களுக்கு நடனம் என தொடர்ந்து விழா விமரிசையாக நடைபெற்றது.


Jagathrakshakan MP : "திமுகவை குறி வைத்த அமலாக்கத்துறை” எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம்..!



தொடர்ந்து இரண்டாவது நாளான ஞாயிற்று கிழமை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் மாநாடு நடைபெறும் இடமான பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி முன்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். இதனை ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம், பட்டிமன்றம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அருணகிரிநாதர் அரங்கில் நடைபெற்றது


Vijay: ஸ்டண்ட் காட்சிகள் மிஷன் இம்பாசிபள் படம் மாதிரி இருக்கும்.. தி கோட் படம் குறித்து திலிப் சுப்பராயன்



இரு தினங்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 2  லட்சம் பேர் கலந்துகொண்டனர். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த வேல் அரங்கம்,  3d திரையரங்கு, vr தொழில்நுட்பத்தில் அறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் நிகழ்வு, புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு முடிந்தும் வருகிற 30-ஆம் தேதி வரை கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.


TN Rains : தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழையா? எங்கெல்லாம் தெரியுமா? அறிவிப்பு இதோ..!


மாநாட்டு நடைபெற்ற போது கூட்ட நெரிசல் காரணமாக பலரும் கண்காட்சியை முழுமையாக காண முடியாத நிலை ஏற்பட்டது. கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளனர். 3d திரையரங்கு மற்றும் அறுபடை வீடுகளை நேரில் பார்ப்பது போல உணர்வதாக கண்காட்சியை பார்த்து விட்டு வந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த கண்காட்சியை சட்டமன்ற ஏடுகள் குழு தலைவர் லட்சுமணன் தலைமையில் குழுவினர் பார்வையிட்டு மகிழ்ந்தனர். முன்னதாக பழனி மலைக் கோயிலுக்கு சென்று சட்டப்பேரவை குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம்  தெரிவித்தாவது, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாகவும் பிரமித்து வைக்க விதமாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டை இதை அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் தமிழர் கடவுளான முருகனுக்கானது என்றும் ஆன்மீகமாக பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.