மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லை பகுதியில் கடந்த 7ஆம் தேதியன்று வேலம்மாள் மருத்துவமனை அருகே கல்லம்பல் மாமுனி வில்வநாதர் ஆலயத்தில் மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேகாலயா ஆளுநர் இல கணேசன்  நலம் பெற வேண்டி நடந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் 


 





 

”திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றோர்கள் கைலாச நாடு தொடங்கிய நித்தியானந்தாவை போல அவர்களும் ஒரு நாட்டை தொடங்கி இந்த கருத்துக்களை சொன்னால் நல்லது. சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்” என்றார். மேலும், இந்து சமயத்தையும் இந்து கடவுளின் மீதும் சுயலாபத்திற்காக அரசியல் விளம்பரத்திற்காக பேசுபவர்கள் உடலில் நாக்கு இருக்காது வெட்டப்படும் என்று பேசியது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இது தொடர்பாக சிலைமான் காவல்துறையினர் தானாக முன்வந்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 




 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில், அவதூறாக பேசும் ,கொலை மிரட்டல் ஆகிய 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.



 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண.