தேனி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பிரசித்திபெற்ற உத்தமபாளையம் அருகே கோம்பை மலைப்பகுதியில் திருமலைராயர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி சயன கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இங்கு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி  சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.


DMK : தி.மு.க.விற்கு மீண்டும் தலைவரானார் மு.க.ஸ்டாலின்..! துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்..! தொண்டர்கள் உற்சாகம்




இதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார். பூஜையில் தேனி மட்டுமின்றி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கோம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Crime: வாயில் கம்பியை திணித்து கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்.


கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய கூத்தப்பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பெருமாள் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு, அவல் உருண்டை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?


கம்பம் வேணுகோபாலகிரு‌‌ஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னா் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் வேணுகோபால கிருஷ்ணன் ஊர்வலம் வந்தார்.




Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?


அதே போல  போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. முத்தங்கி அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இதில் போடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அதே போல பெரியகுளம் தென்கரை, வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது வார சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் வரதராஜ பெருமாளுக்கு வெங்கடாஜலபதி அலங்காரமும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். இந்த வழிபாட்டில் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண