பெரியகுளத்தில் ரூ.50 லட்சம் பணத்துடன் தலைமறைவான அதிமுக பிரமுகரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.  மேலும்,  உறவினர் உட்பட  இருவரையும் கைது செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடல் பருமனுக்காக மருத்துவரை அணுகுபவர்கள்.. ஆய்வறிக்கை கொடுத்த அதிர்ச்சி தகவல் என்ன?


தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் இங்கு குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். மேலும், அதிமுகவின்  இளைஞர், இளம் பெண் பாசறை மாவட்ட செயலாளராகவும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களில் ஒருவரும் ஆவார். இந்த நிலையில் இவரிடம் கார் டிரைவராக பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் அவரது காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் டிரைவர் ஸ்ரீதர் இருவரும்  பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.




அந்த சமயத்தில்  ஆண்டிபட்டியில் நாராயணன் தனது காரை விட்டு இறங்கி அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் காரில் ஏறிவிட்டு, பின்னர் தனது ஒட்டுநர் ஸ்ரீதரிடம் காரில் உள்ள ரூ.50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறி விட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகானின் காரில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காரை நாராயணன் வீட்டில் நிறுத்திய ஓட்டுநர் ஸ்ரீதர், நாராயணன்  வீட்டில் ஒப்படைக்க கூறிய 50 லட்சம் பணத்துடன் தப்பி ஒடி தலைமறைவாகி விட்டதாக நாராயணன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


ஆஸ்கர் கதவை தட்டிய ‛தெய்வமகன்’... 53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சகாப்தம் படைத்த சிவாஜி!



இந்த நிலையில் தனது கணவர் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கார் டிரைவர் ஸ்ரீதரின் மனைவி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து  காவல்துறையினரும் 50 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமான டிரைவரை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கார் டிரைவரை தேடி வந்த நிலையில் தென்காசி பகுதியில் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்து அவரை பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.


Actress Vichithra : ”பத்தினி மாதிரி சேலை கட்டிட்டு வந்திருக்கானு கேட்டாங்க “ - மனம் திறந்த நடிகை விசித்ரா


இந்த விசாரணையில் கார் டிரைவரின் உறவினர் மற்றும் ஸ்ரீதர் மாமனார் வீடு, அவரது வீடு கடை  உள்ளிட்ட மூன்று இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஸ்ரீதர்   வீடுகளில் இருந்து கட்டு கட்டாக பதிக்கி வைக்கப்பட்டு இருந்த 20 லட்ச ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் மீதமுள்ள 30 லட்சம் ரூபாய் மீட்பதற்காகவும் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண