மதுரை என்றதும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி, சுவையான உணவு மற்றும் மணக்கும் மல்லிகைப்பூ. மதுரை மல்லி உள்நாட்டில் மட்டும் பிரபலமானது இல்லை. உலக அளவில் மதுரை மல்லிக்கு மவுசு இருக்கிறதென்பது நாம் அறிந்ததே!


2013-ம் ஆண்டு மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. சந்தைகளில் கிடைகும் மல்லி ஒரு நாளில் வாடிவிடும்; ஆனால்,  மதுரை மல்லி, இரண்டு நாள்கள் வரை வாடாமல் இருக்கும்; மதுரையில் விளையும் மல்லிகைக்கு தனித்துவமான மணம் இருக்கும்; இவை மதுரை மல்லியின் சிறப்புகள். 


இந்நிலையில், இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு மதுரை மல்லியை வாங்கும் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.பண்டிகை காலங்கள் என்றாலே காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகளவில் எகிறிவிடும்.


இப்போது மதுரை மலர் சந்தையில், மதுரை மல்லி கிலோ 2,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மழையினால் மல்லிகை பூ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் அதிக விலைக்கு விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். விநாயகர் சதூர்த்தி விழாவின் மல்லிகையின் விலை கிலோ ரூ.1500 முதல் ரூ1800 வரை விற்பனையானது. விழாக்காலம் முடிந்தது மலர் விலை குறைந்துவிடுவது வழக்கம். ஆனால், இம்முறை தொடர் மழை காரணமாக மதுரை மல்லியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 


தினமும் அரை டன் மல்லிகை பூக்களை சாகும்படி செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஒரு நாளைக்கு 20 கிலோ மல்லிகை மட்டுமே கிடைப்பதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் கூறினார்.