படிக்கும்பொழுதே நடிக்க வந்த நடிகைகளுள் ஒருவர்தான் நடிகை விசித்திரா. சைக்காலஜியில் பட்டம் பெற்ற விசித்திரா தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி என  100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லியாகவும் , காமெடி நடிகையாகவும் நடித்திருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரமாகவே இருந்தாலும் கூட விசித்திராவிற்கு வந்தது எல்லாமே கிளாமர் கலந்த ரோல்ஸ்தான் . இதனால் இவர் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தப்பட்டார். அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா  என கவர்ச்சி நடிகைகளின் பட்டியலில் விசித்ராவும் இடம்பிடித்திருந்தார். கோலிவுட்டில்  ‘சின்னத்தாய்’ என்ற படத்தில் அறிமுகமானார். ‘தலைவாசல்’ படத்தில், ‘மடிப்பு அம்சா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசப்பட்டார். முத்து படத்தில் செந்திலுடன் இவர் செய்த காமெடி காட்சிகள் இன்றளவும் பிரபலம் .






 



இந்த நிலையில் விசித்ரா தான் பீக்கில் இருந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். “நான் 1990 ல திரைப்படத்தில் அறிமுகமான சமயத்தில் வெளியான தலைவாசல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட். அந்த படத்தில் மடிப்பு அம்சா என்னும் கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.அந்த வெற்றிக்கு பிறகு நானும் என் அப்பாவும் ஒரு ரெஸ்டாரண்ட்ல சாப்பிட போனோம். தலைவாசல் முடிந்து அப்போதான் எனக்கு நிறைய வாய்ப்புகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. நான் அப்போ ரொம்ப பிஸியா இருந்தேன்.




அப்படியான நேரத்துலதான் நான் அப்பாக்கூட சாப்பிட போனேன். அந்த சமயத்துல புடவை கட்டிக்கொண்டுதான் சென்றிருந்தேன். உணவகத்துல நாங்க அமர்ந்திருந்த டேபிளுக்கு இரண்டு டேபிள் தள்ளி ஒரு மூனு நாலு பசங்க உட்கார்ந்திருந்தாங்க. அதுல ஒருத்தன் மட்டும் “என்னடா பெரிய பத்தினி போல புடவை கட்டிட்டு வந்திருக்கா?“ அப்படினு கேட்டாங்க. நானும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். எந்த விதத்துல அவன் அப்படி சொன்னான்னு எனக்கு புரியலை . அப்போதான் எனக்கு தோணுச்சு  தலைவாசல்ல நடித்த அந்த கேரக்டர் என்னோட ரியல் வாழ்க்கையையும் தாக்குது போலனு“ என தனது வலிமிகுந்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார் விசித்ரா.