மதுரையில் சமீபத்தில் செல்போன் உதவியால் கஞ்சா விற்பனை குழுவை மதுரை நகர் காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா விற்பனையாளர்கள் பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி உள்ளிட்டவை பயன்படுத்தியது காவல்துறையினரிடம் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி பல்வேறு இடங்களிலும் கஞ்சா கும்பல்கள் மாட்டிவருகின்றனர். புதுச்சேரியில் 12 அடி உயரம் கொண்ட மரம் போல் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

,


இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 240 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பெண், உட்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். 



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவது குறித்த தகவலறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன். உசிலம்பட்டி டி.எஸ்.பி நல்லு மற்றும் எஸ்.ஐ தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வத்தலக்குண்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படி வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் காரில் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.



 

மேலும் கடத்தி வரப்பட்ட 240 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் இளங்கோவன், வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார், அன்னம்பார்பட்டியைச் சேர்ந்த சௌந்திரபாண்டி, வளையபட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், போலக்காபட்டி நரேஸ், தேனி கெங்குவார்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் அவரது மனைவி மேனகா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தப்பி ஓடிய பெரியபாலார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன், கீரிபட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இருவரை தேடி வருகின்றனர்.




மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சாக்லேட் பண்டல்.. போலி சிகரெட்.. தென் மாவட்டங்களை கலங்கடிக்கும் போதை பழக்கம்!

 




மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர்...,” முழு ஊரடங்கின் போது மதுபானங்கள் கிடைக்காமல் நூதன போதை வஸ்துக்களை போதை ஆசாமிகள் பயன்படுத்திவந்தனர். அதனால் கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் தாராளமாக கிடைத்தது. தற்போது முழு ஊரடங்கிற்கு பின்பும் சட்ட விரோத போதைப் பொருட்களின் பயன்படுபாடு அதிகரித்துள்ளது. எனவே காவல்துறையின் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்