திண்டுக்கல் மாவட்டத்தில் 2வது நாள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக பேருந்து போக்குவரத்தில் எந்த பாதிப்பும் தற்போது வரை இல்லை என மாவட்ட போக்குவரத்து துறையினர் தகவல் தெரிவித்தனர்.


TN Bus Strike: பொங்கல் பண்டிகை வருது.. ஸ்டிரைக் எல்லாம் தேவையா? - போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!




தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்தனர். புதன்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தத்தின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து இயல்பாக நடந்து வருகிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரை கொண்டு பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது.


India Maldives Explained: உதவி செய்த நண்பனுக்கே ஆப்பு வைத்த மாலத்தீவு - பாடம் புகட்டுமா இந்தியா?




திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை காலை முதலே பேருந்து நிலையத்திற்கு வழக்கமாக வரக்கூடிய பொதுமக்கள் பேருந்து நிலையம் வந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு சென்றனர். இன்று மாவட்டத்தில் 90 சதவீதமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகள் தடையின்றி சென்று வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பாக தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.


Crime:மகனை கோவா அழைத்துச்சென்று கொன்ற கொடூர கொல்கத்தா தாய்! தவித்துப்போய் ஓடிவந்த தமிழ்நாட்டு தகப்பன்! திடுக்கிடும் தகவல்கள்!




இந்நிலையில் திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 556 பேருந்துகளில் 549 பேருந்துகள் இயங்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக.திண்டுக்கல் மண்டலம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.