ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம்  தேதி  திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 11-ஆம் தேதி அறிவித்தது.



இதனையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல், எதிர்வரும் பிப்ரவரி மாதம்  27ஆம் தேதி நடைபெறும்  என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாநில  சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அத்துடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது.

 



மேலும் வருகின்ற மார்ச் மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் பரபரப்பாக பணிகளை துவக்கியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு கட்சியினர் ஆதரவு கோரி வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசனிடம் பலரும் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில்  மதுரையில்  கமலஹாசன் ரசிகர்கள் அடித்த  போஸ்டர் வைரலாக வருகிறது. அதில்..," ஈவோரை விலக்கு, இன்றைய இலக்கு, ஈரோடு கிழக்கு என   சுயேட்சியாக தேர்தலில் களம் காண்போம் என்பது போல வலியுறுத்தும் விதமாக போஸ்டர் அடுத்துள்ளனர்.