மதுரையில் நடைபெற்ற தென்னக ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேனி எம்.பி., ரவிந்தரநாத்,” தேனி - போடி வரையிலான ரயில்சேவை விரைவில் இந்த மாதத்திற்குள் தொடங்கும். இதுபோன்று வாரத்திற்கு 3 நாட்கள் போடியிலிருந்து சென்னை வரைக்கும் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். எனது சார்பில் 28 கோரிக்கைகளை வலியுறுத்தினேன். மதுரை தேனி போடி ரயில்பாதை மின்மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை அளித்த நிலையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என தெரிவித்தனர். திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப்வரை புதிய வழித்தடம் குறித்த கோரிக்கையின் நிலைமை குறித்து கூட்டத்தில் கேட்டேன். போடி - தேனி இடையே ட்ராபிக் சர்வே தொடர்பான ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டதாக கூறியுள்ளனர் இது தொடர்பாக ரயில்வே வாரியத்தில் நிலுவையில்  உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த புதிய ரயில் வழித்தடத்தை விரைவில் தொடங்கவேண்டும் என கேட்டுகொண்டுள்ளேன்.



 

இதேபோன்று மதுரை - தேனி ரயில் சேவையின் போது  நாகமலை, கருமாத்தூர், செக்காணூரணி, சிக்கம்பட்டி ,தொட்டப்பநாயக்கனூர், பூதிப்பனூர் ஆகிய ரயில்வே நிறுத்தங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.  இந்த கூட்டத்தில் அதிகாரத்திற்கு உட்பட்டு இங்கு கோரிக்கைகள் பரிசீலிக்கிறார்கள். நான் அ.தி.மு.க., சார்பில்தான் வெற்றி பெற்றேன், 40 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற ஒரே எம்.பி நான் மட்டும் தான். இரட்டை இலை வெற்றிமுகத்திற்கு கொண்டுசெல்ல வைத்தவர்கள் தேனி தொகுதி மக்கள் இன்று இரட்டை இலை எந்த நிலைமைக்கு சென்றுள்ளது என்பது பொதுமக்களுக்கு தெரியும்.



 

பாஜக அதிமுக மோதல் தொடர்பான கேள்விக்கு 

 

அரசியல் கட்சிகளை பொறுத்தமட்டில் அந்தந்த கட்சிகளின் தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் அதனை கேட்டு பிரச்னைகளை எப்படி முடிக்கிறார்கள் என்பது தெரியும். பா.ஜ.கவின் தலைமை சரியான முடிவு எடுக்கும், ஆனால் அ.தி.மு.க., தலைமை சரியான முடிவு எடுக்குமா?  என தெரியவில்லை”.



 

ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரவிந்தரநாத்

 

மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள பிரதிநிதிகளால் சட்டபேரவையில் நிறைவேற்றபட்ட மக்களுக்கு பாதகம் இல்லாத சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

 

பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஓ.பி.எஸ்சின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த கேள்விக்கு?

 

அதனை பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.

 

 அதிமுக குறித்த கேள்விக்கு ?

 

தற்போது அதிமுக யாருடைய தலைமை என்ற விவாதத்திற்கு செல்லவில்லை ஒன்றுபட்டால் தான் உண்டுவாழ்வு என இருக்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் வகுத்த பாடம் கொள்கையை கடைபிடித்தால் தான் கட்சிக்கு நல்லது. இப்போது உள்ள தலைவர்கள் கடைபிடித்தால் தான் நல்லது.



ஓ.பி.எஸ்சிடம் இருப்பது கட்சி அல்ல; அது மளிகை கடை போல என ஜெயக்குமார் பேசியதற்கு பதில் அளித்த போது 

 

ஜெயலலிதாவிற்கு  இக்கட்டான நிலையில் யாரிடம் முதலமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள் என ஜெயக்குமாருக்கு தெரியுமா?  3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் இப்படி பேசலாமா. நம்பிக்கை பாத்திரமாக ஓ.பி.எஸ் .,விளங்கியவர் என ஜெயலலிதாவிற்கு தெரியும் , ஜெயலலிதா இல்லை என்ற காரணத்தை வைத்து என்னனாலும் பண்ணலாம் என செய்துவருகிறார்கள். இப்போது உள் மனதில் அதிமுக தொண்டர்கள் துடித்துகொண்டிருக்கின்றனர். அது காலம் வரும்போது விரைவில் வெளிப்படும் என்றார்.