மதுரையில் இருந்து மேலூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் மாட்டு வண்டி ஒன்று மெதுவாக அசைந்தபடி சென்று கொண்டிருந்தது. வண்டியை சுற்றி குட்டி பேனர்களும் நம்மை கவர்ந்தது. அருகே சென்று பார்த்தால் பிரபல யூ- டியூபர்ஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டிருந்தது தெரிந்தது.






Tamil Hippie couples - என்ற யூடியூப் சேனல் வீடியோக்களை அவ்வப்போது நாம் பார்த்திருக்க முடியும். இவர்கள் குட்டி வேனில் இந்தியா முழுவதும் பயணம் செய்தவர்கள். தற்போது மாட்டு வண்டி மூலம் கன்னியாகுமரி முதல் சென்னை மெரினா வரை விழிப்புணர்வு பயணத்தை செய்து வருகின்றனர்.



 

கன்னியாகுமரி மயிலாடி பகுதியைச் சேர்ந்த லிவி - அனுசிரி தம்பதியினர் நம்மிடம்...." விவசாயம் மற்றும் நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு  தான் இந்த பயணத்தின் நோக்கம். கூட்டத்தை கூட்டி விவசாயத்தையும், நாட்டு மாடு வளர்ப்பு குறித்து பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் இணையத்தின் உதவியோடு செல்போன் வழியாக நம்முடைய வீடியோ செல்லும் போது, பலரையும் சென்றடைகிறது. அதனால் எங்களுடைய அனுபவங்களையும், வழி நெடுகே சந்திக்கும் முகங்களையும் காட்டிவருகிறோம்.



 

மாட்டுவண்டியில் செல்லும் எங்களை எல்லோரும் புதுசா பார்க்குறாங்க. நிறைய பேர் சந்தோசப்பட்டு பாராட்டுறாங்க. பயணத்தில் வெறும் சந்தோஷம் மட்டுமில்ல நிறைய சிரமும் இருக்கும். மாட்டுவண்டியில் ரொம்ப நேரம் ஒடிக்கி உட்கார்ந்து கொண்டேவும் வரமுடியாது. நமக்கும் சிரமம், மாட்டுக்கும் சிரமம் அதனால் ஆங்காங்கே ஓய்வுக்கு பின்னர் தான் கிளம்புவோம். எங்களுடைய மாட்டு வண்டி பயணத்தில் தம்பி சஞ்சையும் இணைந்துள்ளார். அவர் தான் மாடுகளை முழுமையா கவனுச்சுகிறார். எங்களின் பயணத்தின் நல்ல நோக்கம் வெற்றியடைய வேண்டும் என அனைவரும் பிராத்திக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.