மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி அளித்தார்.
சமீப காலத்திய பாஜக- அதிமுக மோதல் போக்கு குறித்த கேள்விக்கு
தோழமை கட்சிக்குள் இதுபோன்று நடப்பது சகஜமான ஒன்று. இனிமேல் இதுபோன்று இருக்காது என அவரது கட்சி தலைமையினர் தெரிவித்துள்ளனர். இது போன்ற மோதல் போக்கு 2011-ல் காங்கிரஸ் தி.மு.க.,வுக்கும் இருந்துள்ளது. 2 ஜி ஊழல் வழக்கில் இந்தியாவில் பெரிய சிறையான திகார் சிறையில் கனிமொழியும், ராஜாவும் அடைக்கப்பட்டு, தயாளு அம்மாளிடம் விசாரணை செய்த போது கூடா நட்பு கேடாய் முடியும் என கலைஞர் பேசிவிட்டு அடுத்த ஆண்டே திமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தனர். அதெல்லாம் முடிஞ்சி போச்சு. எங்கள் தலைவர் ஜெயலலிதாவோடு ஒப்பிட யாரும் கிடையாது. அவரை போன்ற தலைவர் யாரும் உருவாகவும் இல்லை. உருவாகவும் முடியாது.
கூட்டணி என்பது கட்சி கொள்கையில்ல. கூட்டணி வச்சுக்கலாம், மாற்றலாம், சேரலாம் அதைப்பற்றி ஒன்றும் கிடையாது. எங்கள் தலைவர்களை பற்றி யார் பேசினாலும் தேவையில்லாமல் விமர்சனம் செய்தால் தகுந்த பதிலடி கொடுப்போம். நாங்கள் பலவீனத்தோடு இல்லை. மோடி சிறப்பாக செயல்படுகிறார். தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கிறார். இப்போதைக்கு அதிமுக பாஜக இந்தப்பிரச்சனை ஒன்றும் இல்லை.
இனிமேல் பேசினால் தகுந்த பதிலடி கொடுப்போம்.
யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எங்கள் சகோதரர். அவரைகூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி முடிவு செய்வார். தென்மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பிடித்த தலைவர் திருமாவளவன். மதுரைக்கு வந்தாலே எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி மேல் வெற்றி வருகிறது. இரட்டை இலை சின்னமும், கட்சி தீர்ப்பும் மதுரை வந்த போது தான் கிடைத்தது. தற்போது மதுரைக்கு வருவதால் இன்னும் மிகப்பெரிய வெற்றி எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கும். அவர் முதலமைச்சர் ஆவார். ஆன்லைன் ரம்மி மசோதா ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டது. இது மாநில அரசு கொண்டு வர முடியாது மத்திய அரசு தான் செய்ய முடியும் என தனது கருத்தை சொல்லி உள்ளார். அந்தக்கருத்துக்குள் என்னால் சொல்ல முடியாது.
பா.ஜ.க., நல்ல கட்சி பிரதமர் நல்லவர் அவரிடம் அண்ணாமலையை நீக்க சொல்லுவீர்களா என்ற கேள்விக்கு,
அது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதையெல்லாம் பேச முடியாது. வேறு எதாவது இருந்தால் பேசுவோம் என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஒரு சிலருக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்கிறது’ - டிஜிபி சைலேந்திர பாபு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்