மதுரையை சேர்ந்த முகம்மது இக்பால் என்ற நபர் மீது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தேச இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பிற மத, சமூகம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டமைக்காக அவர் மீது மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.



 

முகமது இக்பாலுடன் தொடர்புடைய பாவா பக்ருதீன் என்ற மன்னை பாவா என்பவரும் பல்வேறு வலைதள கணக்குகளின் மூலம் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாவா பக்ருதீனை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், 30 புத்தகங்கள் மற்றும் 3 டிஜிட்டல் கருவிகளையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*








 

பா.ஜ.க மீனவரணி துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் கைது











 

சிவகங்கை அடுத்த வைரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் பாஜக சிவகங்கை மாவட்ட மீனவர் அணி துணை தலைவராக இருந்து வருகிறார். சிவகங்கை மதுரை முக்கு பகுகுதியில்  வசித்து வரும் நிலையில் நேற்று முந்தினம் மாலை தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கையில் அரிவாளுடன் வந்ததுடன் முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துப்பாண்டியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.



 

இதற்கிடையே மருத்துவமனையில் இறந்தவரின் உறவினர்கள் ஏராளமானோர் கூடியதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை  மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் கொடூரமாக கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில், சுகுமார், பால்பாண்டி, செல்வேந்திரன் ஆகிய மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.