அறுபடை வீடுகளில்  மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என  பக்தர்கள் பல்வேறு தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .



இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள் ,வெளி மாநிலங்களிலிருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரசின் கோர தாண்டவம் இருந்து வந்த நிலையில்  உலக மக்கள் அனைவரும் கொரோனாவிலிருந்து விடுபட வேண்டுமென பக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி கார் ஒன்றை இழுத்தவாறே நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் அத்தன்வலசு கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ண நாடார்  75 வயதான இவர் அப்பகுதியில் விவசாய வேலை செய்து வருகிறார்.  இவர் வருடத்திற்கு ஒருமுறையாவது பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவதாகவும் அப்படி கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தற்போது வந்த கருப்பண்ண நாடார் தனது முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனை கயிற்றால் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.




உலகெங்கும் கொரோனா வைரசால் மக்கள் அல்லல்படும் அதிலிருந்து விடுபட வேண்டும் எனவும் உலக நலன் கருதி தனது நேர்த்திக்கடனை செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். முதுகில் அலகு குத்தி அதில் கயிற்றைக் கட்டி ஆம்னி வேனை இழுத்தபடியே காவடியையும் சுமந்து கிரிவலம் வந்து மொட்டை அடித்து  தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!