காது குத்து, கல்யாணம், கிடாவெட்டு, ஊர் திருவிழா, இறுதிச்சடங்கு என எந்த விழாவாக இருந்தாலும் மது என்பது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. சமூகத்தில் தினமும் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்த வகையான குற்றத்திலும் மதுவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது

 








 

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என நீதிபதிகள் கூறியது முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கில் நீதிபதிகள் “இருவர் வசிக்கும் பகுதியில் உள்ள. கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கிய பிரமுகர்,  ஊர் தலைவர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என அவர்கள் உறுதி கூறினால்,  அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 


 

திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.  அதில், "நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக காவல்துறையினரால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.










 

தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்  ,  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் நாங்கள் இனி மேல் மது அருந்த மாட்டோம்.  குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தாக” தெரிவித்தார்



 

அப்போது நீதிபதிகள்,   ”இருவர் மீதும்  பல குற்ற வழக்குகள் இருக்கிறது,  இவரும், மீண்டும் ஜாமீனில் இருந்து வெளியே வந்தால், சமூகத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , அவர்கள் பிரமாண பத்திரத்தை ஏற்று கொள்ள முடியாது. அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்,  ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் தலைவர் உள்ளிட்டோர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என அவர்கள் உறுதி கூறினால் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.