திண்டுக்கல் நகரின் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறு நாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில் பட்டி, கலிக்கம்பட்டி, அதிகாரிப்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகைபூ, ஜாதிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், சம்மங்கி, செவ்வந்தி, ரோஸ், வாடாமல்லி போன்ற பூக்கள் பயிர் செய்யப்படுகின்றது.


TANCET 2023: எம்.இ, எம்பிஏ படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரியில்.. எந்தெந்த தேதிகள்? முழு விவரம்..




இங்கு விளைகின்ற பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு நாள்தோறும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். இங்கிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 15 டன்  பூக்கள் வரை விற்பனைக்கு வியாபாரி வாங்கி செல்வார்கள்.


திருவள்ளூர் அருகே 7 ஆண்டுகளாக இருந்த தீண்டாமை சுவர்... கலெக்டர் உத்தரவு.. நடந்தது என்ன?




நாளை  ஆயுத பூஜையை முன்னிட்டு  திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 03.10.22 பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  இரண்டு தினங்களுக்கு முன் ரூ 500க்கு 700 விற்பனையான மல்லிகை பூ தற்பொழுது 1200 க்கு விற்பனை ஆகிறது, அதேபோல் ரூ 400க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது 600 விற்பனையாகிறது, அதேபோல்  ரூ 300க்கு விற்பனையான முல்லைப் பூ தற்பொழுது ரூ 800க்கு விற்பனை ஆகிறது, ரூ 300 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ 500 க்கு விற்பனையாகிறது.


Mahatma Gandhi : மகாத்மா காந்தியை மிதிக்கும் காளி.. ஹிந்து மஹாசபை வைத்த சர்ச்சை சிலை..கொந்தளித்து எழும் கண்டனங்கள்




ரூ120  க்கு விற்பனையான சம்பங்கி தற்பொழுது ரூ 300 க்கு விற்பனையாகிறது, ரூ 100 க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ 280க்கு விற்பனை ஆகிறது, ரூ 25க்கு விற்பனையான செண்டுமல்லி தற்பொழுது ரூ.80க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் செவ்வந்தி ரூ 100 க்கு விற்பனையானது 250 ரூபாய்க்கும் , வாடாமல்லி ரூ 10க்கும், அரளிப்பூ 400 க்கும் விற்பனையாகிறது இதுபோல் அனைத்து பூக்களின் விலைகளும் அதிரடியாக உயர்ந்துள்ளது.


”அப்பா, அம்மா.. உங்க பணத்தை வேஸ்ட் பண்ணவிரும்பல” : பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி




இந்த புரட்டாசி  மாதத்தில் கல்யாணம், காதுகுத்து போன்ற சுப  விசேஷப் மாதம் இல்லை என்ற காரணத்தினால் வீழ்ச்சி அடைந்த காணப்பட்ட பூக்களின் விலை ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர்ந்து உள்ளது என்று  வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மற்றும்  வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.