”அப்பா, அம்மா.. உங்க பணத்தை வேஸ்ட் பண்ணவிரும்பல” : பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி

அறையில் இருந்த உருக்கமான கடிதத்தை மீட்டு கொலையா தற்கொலையா என மறைமலை நகர் போலீசார் விசாரணை

Continues below advertisement

சென்னை தாம்பரம் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் B-TECH முதலாம் ஆண்டு பயின்று வரும் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சோங்காப்பூர், ரயில்வே நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாத் (19) என்கிற மாணவன் கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புக்கு சென்று விட்டு தனது தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் உள்ள (காரி) விடுதியில் தங்கியுள்ளார்.

Continues below advertisement


கடந்த இரண்டு நாட்களாக முகிலு விஸ்வநாத் உடைய அறை கதவு திறக்காமல் இருந்த நிலையில், சந்தேகம் அடைந்த சக நண்பர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதனை அடுத்து முகுலு விஸ்வநாத் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருப்பதை பார்த்த சக நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்குறைவுக்காக செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மேலும் அந்த அறையில் சோதனை செய்த காவல்துறையினர் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கண்டறிந்தனர். அதில் குறிப்பிட்டிருந்தாவது, ”அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள் சிறுவயதிலிருந்தே உங்கள் மீது பெரிதும் பாசத்தோடு இருந்து வருகிறேன்  படிப்பு எனக்கு சுத்தமாக வரவில்லை. அது எனக்கு சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. இனிமேலும், தங்களது பணத்தை நான் வீண் செய்ய விரும்பவில்லை” என உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் இது மறைமலைநகர் காவல் துறையினர் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola