உசிலம்பட்டியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலைகள் தடுப்பு குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றும் முயற்சியாகவும், தற்கொலைகளை தடுப்பது குறித்தும் கடந்த 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஒரு வார காலம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இணைந்து தற்கொலைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் முன்பு பட்டாசு வெடிக்கத் தடை - காவல்துறை உத்தரவு
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணியை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். தற்கொலை தடுப்பு தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் மருத்துவர்கள், மாணவிகள் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
”தற்கொலை செய்துகொள்வது என்பது வெறும் 5 நிமிட செயல்தான். ஆனால் அதனால் அந்த நபரை சார்ந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் தாக்கம், பிரச்சனை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு கண்டிப்பாக தீர்வு இருக்கும். தீர்வு இல்லாத பிரச்சனையே கிடையாது. மிகவும் மன உளைச்சலில் இருக்கும் நிலையில் தற்கொலை எண்ணங்கள் தோன்றுகிறது என்றால் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுவதுடன், உரிய மனநல ஆலோசனையைப் பெறுவதே சிறந்ததாகும். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு ஆகாது. வாழ்க்கை என்பது நாம் அனைவருக்கும் கிடைத்த golden ticket ஆகும் அதனை ரசித்து அனுபவித்து வாழ வேண்டும்” என மருத்துவர்கள் தெரிவித்தனர்.