சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முன்னாள் தேவகோட்டை நகர் மன்ற தலைவர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தாலும் தாங்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதற்கும் அழைப்பதில்லை என்று கார்த்தி சிதம்பரம் முன் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கி கொண்டனர். இத்கில் ஒருவருக்கு மண்டை உடைந்து. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்திலேயே மாறி மாறி நாற்காலிகளை கொண்டு மோதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இதே போன்று 12ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் அப்போது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு 'கட்சியில் வளர்ச்சி அடையவில்லை,. முறையாக கட்சி கூட்டத்திற்கு அழைப்பு யாருக்கும் வருவதில்லை' என பல குற்றச்சாட்டுகளை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் 'நிறுத்துங்கள்' என வலியுறுத்தினார்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
வேலு தொடர்ந்து பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ப.சிதம்பரம் பேச உரிமை கூறவே வாக்குவாதம் கடுமையானது. ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்த நிர்வாகிடம் நீங்கள் போய் மேடையில் அமருங்கள். நான் உங்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்கிறேன் என்று கூறினார். கோபம் அடைந்த கட்சி நிர்வாகி சிறிது நேரத்தில் தான் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கி கொண்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலை அம்பலப்படுத்தி உள்ளது.