மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் உப மின் நிலையத்திற்குட்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார்., இவர் தனது விவசாய தொட்டத்திற்கு மின் இணைப்பு பெற 2010ஆம் ஆண்டு விருப்பமனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த மனுவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்த நிலையில் சிறிது காலத்திலேயே இலவச மின் இணைப்பாக வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து உத்தப்பநாயக்கணூர் உப மின் நிலையத்திற்கு வந்த சசிக்குமார் -இடம் ரூபாய் 40,000 லஞ்சமாக உதவி மின் பொறியாளர் சக்திவேல் கேட்டுள்ளார்., இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாருக்கு தகவல் அளித்த சசிக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி இன்று ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை உதவி பொறியாளர் சக்திவேல் -இடம் வழங்கிய போது மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன், காவல் ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சக்திவேல் - யை கைது செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் - கே. பாலகிருஷ்ணன்