வறட்சியான  பகுதி என்றாலும் விவசாயிகள் அதனையும் சவாலாக எடுத்துக்கொண்டு விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், சிவகங்கை விவசாயிகள். இந்நிலையில் வைகை, குண்டாறு, கிருதுமால் நதிகளில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாகவும் அதனை தடுக்கும் வகையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.








சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ‌அருகே உள்ள பார்த்திபனூர் மதகு அணையில் காவேரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மதுரை வைகை ஆற்றில் உள்ள வீரகனூர் அணை முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி பார்திதிபனூர் மதகு அணையில் இருந்து மதுரை வீரகனூர் மதகு அணை வரை இருசக்கர வாகனத்தில் பைக் பேரணி நடத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத காரணத்தினால் பார்திபனூர் மதகு அணையில் அமர்ந்து 200மேற்பட்ட விவசாயிகள் மணல் குவாரி அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில்  ஈடப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகளை அனுப்பி வைத்தனர்.




இது குறித்து விவசாயி அர்ஜுனன் கூறுகையில், “எங்கள் பகுதியில் வாழை, தென்னை, கரும்பு என பல்வேறு விவசாயங்களை செய்து வருகிறோம். வறட்சியை கடந்து விவசாயம் செய்யும் எங்களுக்கு வைகை, கிருதுமால் நதி, குண்டாறு ஆகிய பகுதிகள் தான் ஜீவநதியாக உள்ளது. இந்த இடங்களில் மணல் குவாரி அமைய உள்ளதாக தகவல் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்றார்.





மேலும் விவசாயி முருகன், "10 ஆண்டு வறட்சிக்கு பின் தற்போது மழை பெய்து வைகையில் தண்ணீர் வருகிறது. இதன் மூலம் மூடிக்கிடந்த சர்க்கரை ஆலையை திறந்துள்ளோம். இந்நிலையில் தண்ணீர் வரும் நதிகளில் மணல் குவாரி அமைப்பது வருத்தத்துக்குரியது. எனவே அதனை கைவிட வேண்டும்" என்றார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!