வாடிப்பட்டியருகே இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளிகளில் உடலை கொண்டு செல்லும் அவலம் பாதை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.

 

 





மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள  போடிநாயக்கன்பட்டி, மேலநாச்சிகுளம், கீழநாச்சிகுளம், கரட்டுபட்டி கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொது மயானம் பெரியாறு பாசன கால்வாய் அருகே அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பொதுவழி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  அப்பகுதியை முதியவர் இறந்த நிலையில் அவரது உடலை கொண்டு செல்ல பொதுவழி இல்லாததால் அவரது உடலை வயல்வெளிகளில் சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.



 

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது பாதை அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,” மதுரை மாவட்டத்தில் எங்கள் பகுதிகளில் தான் அதிகளவு விவசாய பணிகள் நடைபெறுகிறது. இதனால் விவசாய தேவைக்காக தண்ணீர் வசதிகளுக்கு கால்வாய் மற்றும் கண்மாய்கள் உள்ளது. மழை நேரங்களில்  சிரமம் ஏற்படுகிறது. இறப்பு ஏற்படும் போது உடல்களை கொண்டு செல்வது மிகுந்த கஷ்டமாக உள்ளது.  எனவே முறையான பாதை வசதியும் சுடு காடுகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.