சதாசிவானந்த சாமிகள் சமாதி நிலை அடைந்ததை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ்.காலனியில் யதி பூஜையானது நடைபெற்றது, இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” இந்துகளுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு நசுக்கப்படுகிறார்கள்.
ஒரு கோடி இந்துக்கள் தி.மு.க.,-வில் இருப்பதாக கூறும் முதல்வர் இதுவரை இந்துக்களை இழிவுப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை கைதும் செய்யப்படவில்லை. வருகிற விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்தி இந்து ஒற்றுமை விழாவாக இந்து மக்கள் கட்சியின் சார்பாக கொண்டாட உள்ளோம். இது மண் காப்போம் விழா போல அமையும். மண் வளத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம் வேண்டும். ஆளுநர் பல்வேறு கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகிறார் ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு ஒரு நல்ல சந்திப்பு. அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியுள்ளார். ஆனால் ஆன்மீக அரசியலில் இருந்தும், தேசிய அரசியல் கொள்கைகளிலும் இருந்து பின் வாங்கவில்லை. ரஜினியும், ஆளுநரும் சந்தித்தது ஒரு ஆரோக்கியமான ஒன்று. அவர்கள் அரசியல் பேசி இருப்பார்கள். அது ஆரோக்கியமான ஒன்று.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..!
தேசிய அரசியலுக்கும், ஆன்மீக அரசியலுக்கும் ரஜினி குரல் கொடுக்க வேண்டும். விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் "கோயில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும்" என்று நகைச்சுவை நடிகர் சூரி பேசினார், பின்னர் இது குறித்து சர்ச்சை எழுந்த பின் கடவுளைப் பற்றி இழிவுப்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்று விலகி விட்டார். அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்