திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்ததாவது: தமிழக அரசு சார்பில் பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்ட 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இது குறித்து ஆய்வு செய்ததாகவும், ஆய்வின்முடிவில் பழனிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டவும், உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பழனி மற்றும் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தளங்கள் இருப்பதால் அதிகளவில் விபத்து ஏற்பட்டு தலைக்காயம் சிகிச்சைக்காக வருபவர்கள் அதிக அளவில் மதுரை மற்றும் கோவைக்கு அனுப்பப்படுவதாக தெரிகிறது. எனவே பழனியிலேயே தலைக்காய சிகிச்சைக்காக நியூரோ மருத்துவர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், சிடி ஸ்கேன் போல எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.அப்போது தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரும் பழனி அரசு மருத்துவமைனையில் ஒரேயொரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், அதுவும் சுகாதாரமின்றி இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
அப்போது அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் என்பவர் செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து இது கேட்கக்கூடாது என்றும் தகராறில் ஈடுபட்டார். இதனால் துப்புரவு நிறுவன மேலாளருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மேலாளர் விக்னேஷ் செய்தியாளர்களை தாக்க முற்பட்டார். இதனையடுத்து சக ஊழியர்கள் விக்னேஷை தடுத்து அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் மத்தியிலேயே சாகாதாரத்துறை முதன்மை செயலாளர் முன்னிலையில் பத்திரிக்கையாளர்களை தாக்க முயன்ற தனியார் துப்புரவு நிறுவன மேலாளர் விக்னேஷின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பழனி அரசு தலைமை மருத்துவரிடம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து பழனி அரசு மருத்துவமனை ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்கள் தாக்க முயன்றது தொடர்பாக செயலாளர் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் விக்னேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தேனியில் பெண் போல் நடித்து குறுஞ்செய்தி மூலம் 3.5 லட்சம் மோசடி - நைஜீரியாவை சேர்ந்த நபர் கைது