உலகெங்கும் ஒரு புறம் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவந்தாலும் கூட சில தொழிலாளர்களின் பணிகளை மாற்றம் செய்வதற்கான  தொழில்நுட்பங்கள் குறைவாகவே இருந்துவருகிறது.  இதில் ஒரு வகைதான் துணிகளை தேய்க்கும் சலவை தொழிலாளர்களின் பணியும். ஒவ்வொரு சலவை தொழிலாளர்களும் துணிகளை தேய்ப்பதற்காக அதிகளவிற்கு எடையுள்ள இருப்பு தேய்ப்பு பெட்டிகளில் அடுப்புகரியை தீ கங்கு வரும்வரை தீ மூட்டி அதனை அள்ளி இஸ்திரி பெட்டிக்குள் போட்டு சூடேற்றி அந்த சூடை பயன்படுத்தி துணிகளை தேய்த்து கொடுத்துவருகின்றனர்.




காலை தொடங்கி மாலை வரை நின்றபடியே இஸ்திரி செய்யும் சலவை தொழிலாளர்கள் ஒவ்வொரு துணிகளை தேய்க்கும்போது சுமார் 5 கிலோ வரை உள்ள இரும்பு இஸ்திரி பெட்டிகளை தூக்கி கையால் சுமந்து தேய்க்கும் நிலை இப்போது வரை உள்ளது. இதற்கு மாற்றாக மின்சாரம் பயன்படுத்தும் இஸ்திரி பெட்டிகள் வந்தாலும். அதிகளவிற்கான மின்சாரம் பயன்பாடு காரணமாக இதனை பெரும்பாலான தொழிலாளர்கள் பயன்படுத்துவதில்லை, மேலும் குடியிருப்பு பகுதிகளில் சாலையோரமாக இருக்கும் அயர்ன் கடைகளுக்கு மின் இணைப்பு கிடைக்காது என்பதாலும் பழைய முறையே தொடர்கிறது. இதற்கு மாற்றாக  இது போன்று சலவை தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது கரி இஸ்திரிப் பெட்டிகளுக்கு பதிலாக கேஸ் சிலிண்டரில் இயங்கும் இஸ்திரி பெட்டிகளை ஆயில் நிறுவனங்கள், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. 




ஆனால் இந்த இஸ்திரி பெட்டி இருப்பதே சலவைத் தொழிலாளர்களுக்கு தெரியாது. தற்போதுதான் இந்த கேஸ் சிலிண்டர் மூலமாக இயங்கும் இஸ்திரிப் பெட்டி பிரபலமடையத் தொடங்கியுள்ளது.  மதுரையில் சில இடங்களில் சலவைத் தொழிலாளர்கள் இந்த இஸ்திரி பெட்டியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு துணிகளை அயன் செய்து கொடுக்கத்தொடங்கியுள்ளனர. தற்போது இந்த வகை இஸ்திரி பெட்டிகள்,  ஆன்லைன் சந்தைகளிலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.


மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த சலவைத் தொழிலாளி ரங்கசாமி என்பவர் சிலிண்டர் கேஸ் வகை இஸ்திரி பெட்டியை பயன்படுத்திவருகிறார். அவர், ஆன்லைனில் ரூ.7 ஆயிரத்திற்கு வாங்கி பயன்படுத்திவருகிறார். இதன் மூலமாக கரிப்பெட்டி மூலமாக அரை மணி்நேரத்திற்கு 5 முதல் 7 துணிகளை அயர்ன் செய்யும் நிலையில் இந்த வகை அயர்ன் பாக்ஸால் அரை மணி்நேரத்தில்10 முதல் 15 வரை துணிகளை அயர்ன் பண்ண முடிகிறது. முன்பு கரி இஸ்திரி பெட்டியை கொண்டு அயன்செய்யும்போது சாம்பல் மற்றும் கருப்பு கழிவுகள் கையில் ஒட்டும் அப்போது அயன் பண்ணுவதற்கு முன்பு கையை கழுவகொண்டே இருக்க வேண்டும் மேலும் கரியை எரிக்கும் போது  கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுவதால் அதனை சுவாசிக்கும் அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்காக பிரத்தியேகமான அயர்ன் பாக்ஸ்கள் உள்ளது. இதில் கேஸ் சிலிண்டர்களை கொண்டே இந்த இஸ்திரி பெட்டிகளை பயன்படுத்தலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் இஸ்திரி பெட்டிகளுக்கு செலவாகும் மின்சாரக் கட்டணத்தை விட இரு மடங்கு குறைந்த செலவே உள்ளது.




இது குறித்து பேசிய தொழிலாளி ரெங்கசாமி...,"இந்த வகை அயர்ன் பாக்ஸால் கேஸ் ஆன் செய்த இரண்டு நிமிடங்களில் இந்த இஸ்திரி பெட்டி சூடாகி விடுகிறது. யார் வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்த இஸ்திரி பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளதால் அச்சப்பட தேவையில்லை. இந்த இஸ்திரி பெட்டிகள் கடந்த சில ஆண்டிற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போதுதான் பேட்டரி வாகனங்களை போல் பிரபலமடையத் தொடங்கியிருப்பதால், மதுரையில் பல இடங்களில் இந்த இஸ்திரி பெட்டிளை சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். மேலும் தற்போது கேஸ் சிலிண்டர் வகை அயன் பாக்ஸ்களை பயன்படுத்துவதால் விரைவாக துணிகளை அயன் செய்ய முடிகிறது. மேலும் சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்ந்து வருவதால் வருமானம் குறைவாக உள்ளதாக” தெரிவித்தார். இதில் துணிகளை அயன் பண்ணும் போது கறி தூசுகள் படாமல் இருப்பதால் வேலை விரைவாக முடிவதாகவும் தெரிவித்தார். முதலில் இதனை கேரளாவில் பயன்படுத்தி வந்த நிலையில் முதற்கட்டமாக ஆன்லைன் மூலமாக வாங்கி இதனை பயன்படுத்திய தொடங்கிய நிலையில் தன்னை பார்த்து தற்போது மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் சலவை தொழிலாளர்கள் இதுபோன்று சிலிண்டர் அயர்ன் பாக்ஸ்களை பயன்படுத்த தொடங்கியதாக கூறினார்.