சப்தா சாகரதாச்சே எல்லோ

கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’. ரக்‌ஷித் ஷெட்டி, ருக்மினி வசந்த் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹேமந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

Continues below advertisement

மத்திய வர்கத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி தங்களது வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு சின்ன சின்ன ஆசைகள், அதை நிறைவேற்றுவதற்காக அவர்களின் போராட்டங்கள் என பாசங்கற்ற உணர்வுகளால்  நெய்யப்பட்ட ஒரு படமாக ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

‘ஏழு கடல் தாண்டி’ என்கிற படத்தின் டைட்டிலைப் போல் ஏழு கடல்களின் தூரத்திற்கு நிகரான பிரச்னைகளால் பிரிந்து இருக்கிறார்கள். கன்னடம், தமிழ் என இருமொழிகளிலும் பரவலான வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த் ரசிகர்கள் இணையதளத்தில் என்ன கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Continues below advertisement