மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளின் தகுதிகளாக மாநில நகராட்சி நிர்வாக மானியம் சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி பேரூராட்சிகளில் இருந்து தரம் உயர்த்தப்படும் நகராட்சியில் குறைந்தது 30 ஆயிரம் மக்கள் வசிக்க வேண்டும். மேலும் அங்குள்ள உள்ளாட்சி கூட்டமைப்பு மூலம் பேரூராட்சியின் சொந்த வருவாய் ஆண்டிற்கு ரூபாய் 2 கோடி இருக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட பேரூராட்சி உள்ளாட்சி தணிக்கையில் அரசருக்கு சமர்ப்பித்து இருக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளில் மக்கள் தொகை 30 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சொத்துவரி, தொழில்வரி, வணிகம் மற்றும் வர்த்தகங்கள் மூலம் ஆண்டுக்கு வருவாய் 2 கோடிக்கு மேல் உள்ளது. இதனால் இரு பேரூராட்சிகளையும் நகராட்சி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதல் பெற்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது.
அதன் ஆய்வு அறிக்கையில், தரம் உயர்த்தலாம் என ஒப்புதல் அளித்து பரிந்துரை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் மாநில வருவாய் நிர்வாக ஆணையத்திற்கு நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் ஓரிரு வாரங்களில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் தெரிவித்தனர். பேரூராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், பேரூராட்சியில் உள்ளிட்ட 96 பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்த்த தரம் உயர்த்தப்பட உள்ளன இதற்கான அறிவிப்பு விரைவில் அரசு வெளியிடப்படும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்