”இரட்டை ரயில் பாதை பணிகளின் ஒரு பகுதியாக நாகர்கோவில் - எரணியல் இடையே உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 22, 26, 29 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் செப்டம்பர் 20, 23, 27, 30 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நடைபெறாததால் செப்டம்பர் 19 அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மற்றும் செப்டம்பர் 20 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் (16730) ஆகியவை மட்டும் வழக்கம் போல் இயங்கும்.” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 










 

அதே போல் மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16344/16343) மறு அறிவிப்பு வரும் வரை ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஏற்கனவே ஜூன் 16 முதல் இந்த ரயில்கள் பரிசோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று சென்று கொண்டிருந்தது. மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம்  செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒட்டன்சத்திரத்தில் நின்று முறையே காலை 07.50 மணிக்கு மற்றும் மாலை 05.30 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர