சமீபத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று திண்பண்டம் வாங்க முற்படுகின்றனர்.


 





 

அப்போது அந்த கடைகாரர், உங்களுக்கு எல்லாம் திண்பண்டம் கொடுக்க முடியாது.  ஊர்க்கூட்டம் போட்டு  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு கடையில் இருந்து எதுவும் தரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது எனக் கூறுகிறார். அதற்கு ஏதும் அறியாத அந்த அப்பாவிச் சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர். அதற்கு அந்த கடைக்காரர் உங்கள் யாருக்கும் திண்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்கள் ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் உங்க தெருகாரர்கள் இங்கு வரக்கூடாது. அதனால் நீங்கள் யாரும் இங்கு பொருள் வாங்க முடியாது என்றும், உங்கள் தாய் தந்தையரிடம் போய் சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலானது.

 





இந்த நிலையில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட  சிறுவர்களுக்கு மதுரையில் உள்ள பல்வேறு சமூகத்தினர் வைத்திருக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று திண்பண்டங்களை வாங்கி சிம்மக்கல் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட அந்த  சிறுவர்களுக்கு திண்பண்டங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

 





மேலும் தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக ஒரு குழு ஒன்றை அமைத்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.