கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.






கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் 30 வரை அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் நிறைவு பெறலாம் என சொல்லப்படுகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன. 8-ம் கட்ட அகழாய்வில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.


சமீபத்தில் கொந்தகையில் கிடைத்த தாழி எண்  80வது   முதுமக்கள் தாழியியே திறந்து போது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  காரணம்  இந்த முதுமக்கள் தாழி உள்ளே 74 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட சூதுபவள மணிகள் பார்ப்பதற்கு சிவப்பு  நேரத்தில் அழகாய்  உள்ளது. கொந்தகையில் இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் இது மாதிரி  முதுமக்கள் தாழியினுள்  சூது பவளம் மணிகள் கிடைக்கவில்லை. இதுவே  முதன்முறையாகும்  இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தற்போது கிடைத்துள்ள சூது பவள மணிகளை  வைத்து பார்க்கையில் இது மிகவும் வசதியான செல்வந்தருடைய முதுமக்கள் தாழியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




 






 









கீழடியில் புதியநாக அகழ்ந்தெடுக்கப்பெற்ற குழியில், குறிப்பிடத்தக்க வகையில் தந்தத்தினால் செய்யப்பட்ட பெரிய அளவிலான உருளை வடிவ மணி ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது.



தந்தத்தால் செய்யப்பட்ட இந்த நேர்த்தியான மற்றும் தனித்துவமான மணி 164 செ.மீ ஆழத்தில் XM13/4 என்ற குழியினுள்ளிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டது. இத்தந்தத்தினால் செய்யப்பட்ட மணி உருளை வடிவில் அதன் நடுபுறம் துளையுடன் காணப்படுகிறது. இம்மணியின் மேற்புறம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட சுருள்களாக அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றன. மேலும் இதன் மேற்பரப்பு மெருகூட்டப்பட்ட மென்மையான அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இம்மணியின் இரு முனைகளும் தட்டையாக உள்ளது. இம்மணியின் அளவு 5.6×4.0 செ.மீ ஆகும். நடுபுறம் உள்ள துளையின் விட்டம் 1.3 செ.மீ ஆகும்.

 

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு இந்த மாதம் நிறைவடைய உள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில் தந்தத்தால் செய்யப்பட்ட மணி கிடைத்துள்ளது மகிழ்ச்சிடை ஏற்படுத்தியுள்ளது.