”உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை” அசத்திய பூ வியாபாரி..!

நாகர்கோவில் நடைபெறும் கோவில் கொடை விழாவிற்கு உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Continues below advertisement

நாகர்கோவிலில் நடைபெறும் கோவில் கொடை விழாவிற்கு நிலக்கோட்டையில் இருந்து செல்லும் உலர் பழங்களால் ஆன ஆள் உயர மாலை சிறப்பாக வடிவமைத்த மாலை கட்டும் கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு 

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் இருந்து நாகர்கோவில் நடைபெறும் கோவில் கொடை விழாவிற்கு உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

”சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

நாகர்கோவில் அருகே கீழ வண்ணன் விளை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில்  நடைபெறும் ஆவணி கொடை விழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உலர் பழங்களான மாலை தயார் செய்வதற்கான பணியினை நிலக்கோட்டை பூ  மார்க்கெட்டில் உள்ள பிரபலமான மாலை கட்டும் நிறுவனத்திடம் வழங்கினர்.

Watch Video: ”அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி” விமான நிலையத்திற்கே வந்த நடிகர் நெப்போலியன்..!

இதனை அடுத்து கடந்த 20 நாட்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மாலைகட்டும் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் உலர் பழங்களாலான மாலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் . ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கோர்த்து பிரம்மாண்ட மாலைகளை வடிவமைத்தனர்.  அதிக அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டும்  மாலையில்  கோர்க்கப்பட்ட உலர் திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவை செதுக்கி வைக்கப்பட்ட சிலை போல் மாலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது .மாலை கட்டும் பல கலைஞர்களின் கடின உழைப்பில் உருவான  தலா 75 கிலோ எடை கொண்ட மூன்று  மாலைகள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன .

Breaking News LIVE: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை..!

மாலை கட்டும் நிறுவனத்தை நடத்தி வரும் சகோதரர்களான முருகன், முத்துக்குமார் ஆகியோர் கூறும் போது தங்க நகை ஆபரணம் செய்யும் நேர்த்தியில் பூமாலை செய்யும் அழகில் உலர் பழங்கள் மாலை செய்து இருப்பதாகவும் இந்த மூன்று மாலைகளும் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் கொண்டவை என்றும் இந்த வாய்ப்பின் மூலம் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றதாகவும் கூறினர் .

உதிரும் பூக்களை மட்டுமல்ல உதிராத உலர் பழங்களையும் பூக்களாக  வடிவமைக்க தங்களால்   முடியும் என்ற நிலக்கோட்டை மாலை கட்டும் கலைஞரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார பிரம்மாண்ட உலர் பழ மாலையை மலர் சந்தைக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து பாராட்டி சென்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola