17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.


முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்ற முதல்வர் 


முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு துறை சார்ந்த முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதற்காக அமெரிக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அவருக்கு தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, அவருக்கும் அவரது மனைவியான துர்கா ஸ்டாலினுக்கும் அமெரிக்கா விமானநிலையத்தில் வைத்தே கற்பூரம் கொளுத்தி ஆரத்தி எடுத்து தமிழர்கள் வரவேற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் ” அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது, தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பில்” என குறிப்பிட்டு அந்த காட்சிகளை பகிர்ந்துள்ளார். கூடவே, அன்பை வெளிப்படுத்தும் இதய குறீயிட்டையும் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்






ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு


முதல்வர் இந்த அமெரிக்க பயணத்தின்போது ஒரு ட்ரில்லியன் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது