மதுரை அ.தி.மு.க., மாநாடு பிரமாண்டத்தை எட்டியது. எண்ணில் அடங்கா அ.தி.மு.க., தொண்டர்கள் மாநாடு நடைபெற்ற இடங்களையே சுற்றுவந்தனர். மாநாட்டுக்கு முதல் நாளே வண்டி கட்டி கிளம்பிய தொண்டர்களுக்கு மாநாட்டு திடல் திருப்தியை கொடுத்தது. மாநாட்டிற்கு காலை 7 மணிக்கே வந்துவிட்டனர். நான்கு வழிச்சாலையே நிறம்பி வழிந்தது.

 





இதனால் மாநாடு நடைபெறும் பகுதியே போக்குவரத்து நெரிசல் சூழ்ந்தது. எடப்பாடி கே.பழனிசாமிகு ஹெலிகாப்டர் மூலம் 600 கிலோ மலர்கள் தூவப்பட்டது. இதனால் ஜெயலலிதா பிரமாண்ட பாணியை எடப்பாடி கையில் எடுத்தது அப்பட்டமாக தெரிந்தது. கொடியேற்றிய எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து விழாவில் கண்காட்சி அரங்கத்தையும் திறந்து வைத்தார். மாநாட்டு நிகழ்வை பார்த்த பின் மீண்டும் ஹோட்டலுக்கு கிளம்பினார். மாநாட்டு அரங்கில் பாட்டுக் கச்சேரி, நகைச்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம், ஆடல் பாடல் நிகழ்வு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

 




 

தொடர்ந்து மீண்டும் மாநாட்டு நிகழ்விற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடையில் முன்னாள் அமைச்சர்கள் பலரும்  பேசும் போது எடப்பாடி பழனிசாமி புகழ்பாடினர். தொடர்ந்து மக்கள் கூட்டம் வரவும், ஊர் திரும்பவும் என இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசும் போது மக்கள் கூட்டம் களைய ஆரம்பித்தது. மாநாட்டிற்கு முதல்நாளே வந்ததால் தொண்டர்கள் சோர்வடைந்து ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.



 

அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி 50 நிமிடங்களைத் தாண்டி பேசுக் கொண்டிருந்தார். இதனால் அவர் பேசும் போது சொற்ப அளவே தொண்டர்கள் இருந்தனர். இவ்வளவு செலவு செய்து மாநாட்டு நிகழ்வை முறையாக ஒருங்கிணைக்காமல் போனதால் உணவு வழங்குவதிலும், எடப்பாடி பழனிசாமி பேசும் போது தொண்டர்கள் இல்லாதது மாநாட்டில் ஏற்பட்ட முக்கிய பிரச்னையாக நிர்வாகிகள் உணர்ந்தனர்.



 

இதுகுறித்து அ.தி.மு.க., தொண்டர்கள் சிலர் நம்மிடம் கூறுகையில்,” மதுரையில் நடைபெற்ற மாநாடு பிரமாண்ட மாநாடு தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் முறையான ஒருங்கிணைப்பு செய்யாமல் போனது மிகப்பெரும் தோல்வியாகிவிட்டது. சேலம், விழுப்புரம் என வெளி மாவட்ட தொண்டர்கள் வருகை இருந்தது. ஆனால் தென் மாவட்ட தொண்டர்களின் வருகை குறைவாக இருந்ததால் கூட்டத்தை சீர் செய்யமுடியவில்லை. வந்திருந்த வெளியூர் தொண்டர்களுக்கு உணவுகள் சரியாக கிடைக்கவில்லை. புளியோதரையும், சாம்பார் சாதமும் வாயில் வைக்க முடியவில்லை. ஹெலிகாப்டருக்கு செலவு செஞ்ச காசை உணவுக்கும் செலவு செஞ்சிருக்கலாம். இது போன்ற சின்ன, சின்ன விசயத்தால் ஒட்டுமொத்த மாநாட்டிற்கு கெட்ட பெயராக அமைந்துவிட்டது” என நொந்து கொண்டார்.