மதுரை ஆழ்வார்புரம் யானைக்கல் தரைப்பாலம் வைகையாற்று பகுதியில் முழுவதுமாக ஆகாயத்தாமரை நிரம்பியுள்ளது. இதன் காரணமாக தரைப்பாலத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் அதன் அருகில் இருக்கக்கூடிய மீனாட்சியம்மன் கோவில் தீர்த்த கிணற்றிற்கு என ஆயிரக்கணக்கான வந்து செல்வர். அந்த பகுதி முழுவதிலும் ஆற்று நீர் கண்ணிற்கு தெரியாத அளவிற்கு முழுவதிலுமாக ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் எதிர்பாராத விதமாக ஆற்றிற்குள் தவறி விழுந்தால் ஆகாயத்தாமரை செடிகளுக்குள் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சித்திரை திருவிழா நடைபெற்ற போதே ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.



 

அதனை பொருட்படுத்தாத நிலையில் சித்திரை திருவிழாவின் போது மூன்று பேர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பையும் கண்டுகொள்ளாத நிலையில் தற்பொழுது வைகை ஆறு முழுவதிலும் ஆகாயத்தாமரை செடி படர்ந்து காணப்படுகிறது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறையினர் இடையே இருக்கக்கூடிய அதிகார மோதல் போக்கால் அம்பலப்படுத்துகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் ஆகாயத்தாமரை இருப்பதன் காரணமாக பொதுமக்களோ கால்நடைகளோ, தவறி உள்ளே விழுந்தால் ஆகாய தாமரை செடியில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும். எனவே இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுமா ? என்பதுதான் பொதுமக்களுடைய கேள்வியாக உள்ளது.

 












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண