விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் என பல இடங்களில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் தொழிற்சாலைகளில் சில இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடல்சிதறி உயிரிழப்பு:


இந்நிலையில் சாத்தூர் அருகே பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து ஏற்பட்டதில் கோட்டைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த வைரமுத்து(40) என்பவர் அதே கிராமத்தின் அருகே    ஸ்ரீவேணி என்ற பெயரில் பட்டாசு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் பட்டாசு கடையின் அருகே தனியாக தகரசெட் அமைத்து விதிகளை மீறி சட்டவிரோதமாக பேன்ஸி ரகபட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் வழக்கம் போல சட்டவிரோமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது திடீரென பட்டாசுகள் வெடித்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.



 

இளைஞர் உயிரிழப்பு:

 

மேலும் சட்டவிரோதமாக செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட கொண்டிருந்த போது பட்டாசுதொழிலாளர் கோட்டைப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (32) என்பவர் பட்டாசு விபத்தில் சிக்கி உடல் சிதறி கால் பகுதி, உடல் பகுதி அனைத்தும் தனித்தனியாக சிதறிஅடையாளம் தெரியாத நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை , மற்றும் சாத்தூர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவ விடாமல் தடுத்து தீயை அனைத்தனர். மேலும் பட்டாசு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி முற்றிலும்  நாசமானது. இந்த வெடிவிபத்து   குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.