கள்ளழகர் சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றின் எழுந்தருளும் பகுதியில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்

 

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று  தொடங்கி 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 5ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியானது நடைபெறும். இதற்காக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் பகுதிகளில் சீரமைப்பு பணிகள்  நடைபெற்றுவருகிறது.

 





 

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்:

 

ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் வர்ணம் தீட்டும் பணிகள் மற்றும் வைகை ஆறு பகுதிகளில் தேங்கியிருக்கக்கூடிய கழிவுகளை அகற்றும் பணிகளானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆழ்வார்புரம் அருகே வைகையாற்று பகுதியில் அமைக்கப்படக்கூடிய மண்டகப்படி உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.



நேற்று முன்தினம் வைகை அணையில் இருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று  ஆற்றிக்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஆழ்வார்புரம் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.