மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என்று அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது எனவும் வைகோவை கடுமையாக சாடும் வகையில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
துரைசாமியின் இந்த அறிக்கை மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுக மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் பூமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” மதிமுக அவைத்தலைவர் திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று பேசிய கருத்து தலைவர் வைகோவின் கருத்து இல்லை. அவைத்தலைவர் வேண்டும் என்றே தலைவர் வைகோவின் கருத்துக்கு எதிராக பேசுகிறார். கட்சியில் பலர் வருவார்கள் போவார்கள் ஆனால் தலைவர் வைகோவின் கருத்தே இறுதியானது , தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்பவர்கள் தான் கட்சி பொறுப்பில் நியமிக்கபடுகின்றனர். யாரும் உறவினர் என்ற முறையில் பொறுப்பு வழங்கப்படவில்லை, அவைத்தலைவர் தெரிவித்த கருத்து சுயநல நோக்கத்திற்காக தெரிவித்துள்ளது அதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அவைத்தலைவர் திமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இப்போது திமுகவுடன் இணைய வேண்டும் என்று சொல்வது ஏன் ?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்