தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில்  காலியாக இருக்கும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 22 ஊராட்சி வார்டுகள் உறுப்பினர்களுக்கான தேர்தலும், 4 ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தலும், இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் என 28 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளன.




இந்த பதவிகளுக்கு கடந்த மாதம் வேட்புமனு தாக்கல் நடந்த நிலையில், அதில் 28 பதவிகளுக்கும் மொத்தம் 108 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 10 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. மேலும் மீதமுள்ள 38 பேர் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நிலையில், இதனால் தேர்தலில் போட்டியிட 60 பேர் மட்டுமே போட்டியிடவுள்ளனர். ஆண்டிப்பட்டி, கோவில்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சி தலைவர்கள், 13 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தலா ஒருவர் போட்டியிட்டதால் 15 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.




இதைத்தொடர்ந்து 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வில்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சித் தலைவர்கள், இரண்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 13 பதவிகளுக்கு நாளை சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது. இந்த 13 பதவிகளுக்கும் 45 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி தேர்தலுக்கு 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் மதுபான கடைகள் மூடப்பட உத்தரவிட்டுள்ளனர். அதனடிப்படையில் இடைத்தேர்தலை முன்னிட்டு தற்போது 50  மதுபானக் கடைகள் 19 தனியார் பார்கள் மூடப்படுகின்றன. மேலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான 12-ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 74 அரசு டாஸ்மாக் கடைகள், 40 தனியார் பார்கள் மூடப்பட உத்தரவிட்டுள்ளனர்.


அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை செய்யவும்,


அரசு நிலத்தை அபேஸ் செய்து மலையை விழுங்கிய அதிமுக பிரமுகர் - குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் மனு


தீபாவளி பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லெட்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை செய்யவும்,


தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!