நடிகை கஸ்தூரி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி. இவர் அவ்வப்போது அரசியல், பிரபலங்கள் குறித்து கருத்து கூறுவது வழக்கம். அந்த வகையில் இவர் தெலுங்கர்கள் குறித்து கூறிய கருத்து பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார்.
சென்னையிலும் வழக்கு
கடந்த மூன்றாம் தேதி ராஜநத்தம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திராவிட கழகம் குறித்தும் தெலுங்கு பேசுபவர் மற்றும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறு வார்த்தைகளை பேசி உள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பல்வேறு அமைப்பு சார்பாக கண்டனத்தை தெரிவித்த நிலையில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் மத, மொழி, குறித்து இரு வேறு மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்துவது என நான்கு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்ததோடு இதுகுறித்து எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
புகார் அளித்துள்ளார்
இந்த நிலையில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் நடிகை கஸ்தூரி மீதும் அது ஒளிபரப்பிய youtube சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தன் குடும்பத்தின் மீதும் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார். இது குறித்து திருநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரச்னை ஓவர்.. தீபாவளி ட்ரீட் கொடுத்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்.. சீன ராணுவ வீரர்கள் ஹேப்பி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!