பிரேக் பிடிக்காமல் சென்ற கார் மோதியதில் நொறுங்கிய கார்
ஒசூர் அருகே பெங்களூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற லாரி முன்னாள் சென்ற ஏழு கார்கள் 3 லாரிகள் ஒரு அரசு பஸ் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒசூர் பெங்களூரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று மாலை நாலு மணி அளவில் கிருஷ்ணகிரி இல் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது மோதியது.
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்
மோதிய வேகத்தில் அந்த லாரி சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. அந்த லாரியும் முன்னாள் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதியது தேசிய நெடுஞ்சாலை என்பதால் கார்கள் மற்றும் அரசு பஸ்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இதில் ஏழு கார்கள், 3 லாரிகள், ஒரு அரசு பஸ் விபத்தில் சிக்கன. இதில் 5 கார்கள் நொறுங்கியது ரெண்டு கார்களின் பின்பகுதி சேதமானது.
விபத்து நடந்த பகுதியில் சாலை முழுவதும் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கியவர்களை போலீசார் மீ ட்டனர். இதில் ஒரே காரில் சென்ற கோவையை சேர்ந்த ஆயில் மில் அதிபர் வெங்கடேசன் (33) அவரது நண்பர் அரவிந்த் (30) ஊழியர்கள் தஞ்சாவூரை சேர்ந்த துறை (24) பழனியை சேர்ந்த கார்த்திக் ராஜா (26) ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
மற்றொரு காரில் சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்விழி (65) அவரது மகன் பூபேஷ், டிரைவர் ரவி (55) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் படுகாயம் அடைந்த வேல்விழி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு , டிரைவர் ரவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் பெற்று வருகின்றனர்.
போக்குவரத்தை சீர் செய்த காவல்துறையினர்
இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அட்கோ போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இதை அடுத்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து ஒசூர் அட் கோ போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் டிரைவர் ரவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.