தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வீடு புகுந்து 30 சவரன் நகை ரொக்க பணம் மற்றும் காரினை கொள்ளை அடித்து சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரொக்க பணம் நகை மற்றும் காரினை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
உத்தமபாளையம் அருகே வீடு புகுந்து 30 சவரன் நகை ரொக்க பணம் மற்றும் காரினை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் என்பவர் மருந்து கடை நடத்தி வரும் இவர் தனது மனைவி லட்சுமியுடன் ராயப்பன்பட்டிக்கு செல்லும் தோட்ட சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகனின் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்று விட்டு கடந்த 6 ம் தேதி காலை சொந்த ஊருக்கு வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் வாசலில் நின்றிருந்த சுவிப்ட் கார் மற்றும் வீட்டிற்குள் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து 30 சவரன் நகை மற்றும் ரொக்க பணம் ரூபாய் 50 ஆயிரத்தை திருடிச் சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
இந்நிலையில் அவரது வீட்டிற்கு தற்காலிக கார் ஓட்டுநராக (ஆக்டிங்டிரைவர்) வந்த போடியைச் சேர்ந்த விஜயகுமார் மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அவரது வீட்டில் இருந்து கார் மற்றும் ரொக்க பணம் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய போலீசார் விசார்ணையில் தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் நகை மற்றும் காரினை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.