பிரதமர் மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.
பிரமதரின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு:
இதனால், டியோகர் விமான நிலையத்தில் அவரது விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையும் படிக்க: TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
முதற்கட்ட வாக்குப்பதிவில் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், வரும் 20ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
நடந்தது என்ன?
ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழாவையொட்டி ஜார்க்கண்டில் இன்று நடைபெற்ற இரண்டு பேரணிகளில் பிரதமர் உரையாற்றினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், டியோகர் விமான நிலையத்தில் அவரது விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் நடந்த டியோகரில் இருந்து 80 கிமீ தொலைவில், ராகுல் காந்தியில் தேர்தல் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், பிரதமரின் விமானத்தை இயக்குவதற்காக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை தரையிறக்க 45 நிமிடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் படிக்க: அரசியலில் டக் அவுட்டான தில்ஷான்.. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்விய முன்னாள் கேப்டன்!