சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து  தற்போது மகர விளக்கு பூஜை 2024 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சென்ற மாதம் நவம்பர் 16ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்ட முதல் நாள் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

இதையும் படிங்க: School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?

தங்க அங்கி ஊர்வலம்

சபரிமலை சீசன் ஆரம்பம் ஆனதையடுத்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வான சபரிமலை ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி சுமந்து வருடாந்திர ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.

Continues below advertisement

அங்குள்ள பார்த்தசாரதி கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் பக்தர்கள், திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். 1970களில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரால் 453 இறையாண்மைகள் எடையுள்ள ‘தங்க அங்கி’ ஐயப்பனுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆரண்முளா பார்த்தசாரதி கோவிலில் வைத்து, மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

இதையும் படிங்க: Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது பக்தர்கள் ஐயப்பன் கீர்த்தனைகள் பாடி, ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற மந்திரத்தை உச்சரித்தனர். இந்நிகழ்ச்சியின் போது டிடிபி தலைவர் பிஎஸ் பிரசாந்தும் உடன் இருந்தார். தங்க அங்கி ஊர்வலம் தொடங்கிய நிலையில் வழியில் உள்ள 74 கோவில்களில் வரவேற்பு பெற்ற பிறகு டிசம்பர் 25-ம் தேதி வியாழன் இரவு சபரிமலை சென்றடைந்தது.

மண்டல பூஜை

நிகழாண்டு மண்டல பூஜை யாத்திரை காலத்தில் கடந்த நவம்பா் மாதம் 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில்  யாத்திரை காலத்தின் நிறைவாக வியாழக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, நண்பகல் 12.30 மணிக்கு சபரிமலை கோயிலில் மூலவா் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க கவசத்தில் சுவாமி ஐயப்பன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மண்டல பூஜையின் நிறைவாக வியாழக்கிழமை இரவு ‘ஹரிவராஸனம்’ ஒலிக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்பட்டது. ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் திங்கள்கிழமை (டிச. 30) கோயில் மீண்டும் திறக்கப்படும்.

பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தங்க அங்கி’ ஊா்வலம், மண்டல பூஜையையொட்டி, சபரிமலையில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காக கடந்த இரு நாள்களில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதன்படி, தங்க அங்கி ஊா்வலம் சந்நிதானத்தை அடைந்த புதன்கிழமையன்று 62,000-க்கும் அதிகமான பக்தா்களும் வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி கிட்டத்தட்ட 20,000 பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.

திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தகவலின்படி, நிகழாண்டு மண்டல பூஜை யாத்திரை காலத்தில் சுமாா் 32.5 லட்சம் பக்தா்கள் சாமி தரிசனம் செய்துள்ளனா். இதே காலத்தில் கடந்த ஆண்டு 28.42 லட்சம் பக்தா்கள் வந்த நிலையில், நிகழாண்டு 4.07 லட்சம் பக்தா்கள் கூடுதலாக வந்துள்ளனா்.