கோவாவில் அமைந்துள்ளது காமுரிலிம். அந்த பகுதியில் வசித்து வருபவர் அல்பாஸ் அகா அப்சல் நூர் அகமது கான். அவருக்கு வயது 21. இவர் ஹாவேரி கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணின் தோழிகளும் இவருக்கு நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்களில் 19 வயது பெண் ஒருவரும் அப்சல் கானுக்கு நண்பராக இருந்துள்ளார்.
பார்ட்டிக்கு போன இளம்பெண்:
இந்த நிலையில், வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அர்போராவிற்கு அகமது கானின் தோழி தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் அகமது கானின் காதலியும் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டிக்கு அகமது கானின் காதலியின் தோழி சென்றுள்ளார்.
அந்த பார்ட்டிக்கு தனது காதலியை பார்ப்பதற்காக அகமது கானும் சென்றுள்ளார். திடீரென அந்த பார்ட்டிக்கு சென்ற அகமது கான் தனது காதலியுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டுள்ளார். பின்னர் சில பொருட்கள் வாங்கி வருமாறு தன்னுடைய காதலியை வெளியில் அனுப்பியுள்ளார். அவரும் வெளியில் சென்றுள்ளார்.
தோழியின் காதலன் செய்த செயல்:
அப்போது, அகமது கானின் காதலியின் தோழி தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து அகமது கானும் சென்றுள்ளார். அங்கு அகமது கான் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, அந்த பெண் அவரிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிவிட்டார். ஆனாலும், தனக்கு நேர்ந்த இந்த அவலத்தை அவர் பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். அதேசமயம், இந்த சம்பவம் காரணமாக அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட அவரது அக்கா இதுதொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவர் தனது அக்காவிடம் கூறி அழுதுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக அவரது அக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 376-வது சட்டப்பிரிவின்படி அப்சல்நூர் அகமது கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலியின் தோழியையே இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime: தரதரவென இழுத்து! 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...கிருமிநாசினியை குடிக்க வைத்த கொடூரம்...நடந்தது என்ன?
மேலும் படிக்க: Haryana Clashes: மணிப்பூரே ஓயல...கலவர பூமியான ஹரியானா...மசூதிக்கு தீ வைத்து எரிப்பு...உண்மையில் என்னதான் காரணம்?