பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் (Bharatiya Co-operative General Insurance Company Limited) என்ற பெயரில் பசல் பீமா உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்காக ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெறுவதாக போலியாக விளம்பரம் வெளியிடப்பட்டு வருவது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்
போலி நிறுவனம்..
காஞ்சிபுரம் - Kanchipuram News: பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் (Bharatiya Co-operative General Insurance Company Limited) என்ற பெயரில் பசல் பீமா உதவியாளர் (Fasal Bima Assistants) பணிக்காக ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெறுவதாக போலியாக விளம்பரம் வெளியிடப்பட்டு வருவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறியதாவது...
பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்னும் ஆட்சேர்ப்பு நிறுவனம் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, ஆந்திர மாநிலத்தில் 829 பசல் பீமா உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்து விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- வசூலித்துள்ளது என தெரியவருகிறது.
இந்நிறுவனம் இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவரும் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்