திடீர் கன மழை
சென்னை புறநகர் பகுதியில் நள்ளிரவில் திடீர் கன மழை பெய்து வருவதால் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த மழை காலங்களில் பொழுது செய்து முடிக்க வேண்டிய பல்வேறு கால்வாய் பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதால், சில நிமிடங்கள் பெய்த மழைக்கு வாகன ஓட்டிகள் தண்ணீரில் தத்தளித்தனர். குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
கால்வாயில் மூழ்கிய பைக்
அந்தவகையில், தாம்பரம் பம்மல் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள மூங்கில் ஏரி பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழை நீரில் ஊர்ந்து சென்றனர். அப்பொழுது அந்த வழியாக சென்ற சொமோடோ உணவு டெலிவரியில் பணியாற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில், உணவு டெலிவரிக்காக சென்றுள்ளார். ராஜேந்திரன் அவ்வழியாக செல்லும் பொழுது சாலை ஓரம் உள்ள மழை நீர் கால்வாயில், அவரது பைக் முழுமையாக முழுகி உள்ளது. பைக் நீரில் மூழ்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை கையைப் பிடித்து அவரை காப்பாற்றி உள்ளனர்.
இருசக்கர வாகனத்தை
அப்பொழுது அவரது இரு சக்கர வாகனம் கால்வாயில் முழுமையாக முழுகி உள்ளது. இதைப் பார்த்த ராஜேந்திரன் மனம் உடைந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்லுள்ளார். சிறிது நேரத்தில் மழை நீர் வடிய துவங்கியுள்ளது. உடனே அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மழை நீர் கால்வாயில் இறங்கி முழுகிய இருசக்கர வாகனத்தை மீட்டனர். மிக முக்கிய சாலையாக உள்ள இந்தப் பகுதியில் பெய்த சிறு மழைக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது, அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்திற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.09.2023 மதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஊருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.