Breaking News LIVE, Aug 11: இரவு 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE, Aug 11: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
Breaking News LIVE, Aug 11: இரவு 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதானி குழும முறைகேடு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
SEBI தலைவர் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்? பங்குச்சந்தை செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தும் அமைப்பே பணி செய்ய தவறியதற்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் 3வது பாடலான ‘அறுவடை’ நாளை (12.08.2024) இரவு 7 மணிக்கு வெளியா இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்திலிருந்து ரெஜினா போஸ்டர் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் ட்ரெய்லர் நாளை பகல் 1 மணிக்கு வெளியாக இருப்பதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உயிர் பிழைத்த கடைசி நபரை வெளியேற்றிய இந்திய விமானப்படை. கேதார்நாத் பள்ளத்தாக்கில் மீட்புப் பணிகளை நிறைவு செய்துள்ளது. கௌரிகுண்டில் இதுவரை மொத்தம் 218 பேர் மீட்கப்பட்டனர். அங்குதான் மேக வெடிப்பு ஏற்பட்டு, நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்தது.
தயாரிப்பாளர் சங்கத்துடன் எந்தப் பிரச்சனையும் கிடையாது. வரும் வாரத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு லட்டு வழங்கிய எடப்பாடி பழனிசாமி.
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற நிதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி பள்ளி கட்டடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் பள்ளி குழந்தைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி லட்டு வழங்கினார்.
நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஏழு மாத காலமாக நெல்லை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி தற்போது நெல்லை டி ஐ ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளேன், காவல்துறையின் பொதுமக்கள் ஒத்துழைப்போடு மாநகரில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது.
அதுபோன்று 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்படும், சிறார் குற்றங்கள், சாதிய மோதல்கள், பாலியல் குற்றங்கள், கஞ்சா புழக்கம் ஆகியவை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
அரசு காவல்துறை எப்படி செயல்பட வேண்டும் என விரும்புகிறது அதன்படி செயல்படுவேன். பள்ளி மாணவர்களிடையே சாதிய பிரச்சனை அதிக அளவில் ஏற்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு சிறார் குற்றங்கள் மீதான சட்டம் மென்மையாக உள்ளது , கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல்துறையினர் மூலம் பள்ளிகளில் மாணவர்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, ஆசியர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது . பொதுமக்கள் காவல்துறை உறவு மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 9443168256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் அறிக்கை
ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உறுதியான பிறகும், அதே குற்றச்சாட்டை மறுசுழற்சி செய்து வெளியிடப்பட்டுள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது
முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் 19,922 மாணவ, மாணவிகள் என்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்!
மதுரை மாவட்டம் வாடிப்படியில் உள்ள பொன் அழகாயி அம்மன் திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற களரி எடுக்கும் திருவிழா.. ஆட்டுக்கிடாய் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்ற கிராம மக்கள்!
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 81% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது . கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரத்தில் 22 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது புகாரளித்த அல்ஜீரிய வீராங்கனை இமேன் கலிஃப்! நடவடிக்கை எடுக்குமாறு ஃப்ரான்ஸ் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்
உலக இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டம், தாராசுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி இதயா கல்லூரி வரை நடந்தது முதலிடம் பிடித்தவருக்கு ₹10,000 பரிசாக வழங்கப்பட்டது
Background
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் செய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை - திண்டுக்கல் நத்தம் அருகே மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய தொடங்கியுள்ளது - முதலமைச்சர் தொழில்வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டால் பிரதமர் மோடி - ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கேரள அரசு கோரிக்கை
- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்
- அதானி குழும முறைகேட்டில் SEBI தலைவர் மாதபிக்கு பங்கு? ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் பரபரப்பு!
- அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பங்குச்சந்தையில் எதிரொலிக்குமா? - ஹிண்டர்பர்க்கின் அறிக்கையால் முதலீட்டாளர்கள் கலக்கம்
- ஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதில் இரட்டை நிலைப்பாட்டில் ஈரான்
- பாகிஸ்தானில் 74 சதவிகிதத்தினர் செலவிற்கு வழியின்றி தவிப்பு - ஆய்வில் தகவல்
- 200-க்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் டிரோன் தாக்குதலில் பலி
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க முயற்சிகள் முடிந்தது - ஒரு வெள்ளி உட்பட 6 பதங்களை மட்டுமே வென்றது
- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? - சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு
- இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது மருத்துவ முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வு - 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க அனுமதி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -