சர்வதேச அளவில் தமிழக முருங்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முருங்கை விவசாயக் கருத்தரங்கம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கி உள்ளது. இதில் சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள், முருங்கை மதிப்பு கூட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் முருங்கை விவசாயிகள் பங்கேற்றனர்.




இந்திய அளவில் தமிழ்நாடு முருங்கை விவசாயத்தில் முதன்மை வகித்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முருங்கை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் தமிழகத்தில் உற்பத்தியாகும் முருங்கையை முன்னெடுத்து செல்ல தமிழக அரசின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஏற்பாடு செய்த சர்வதேச முருங்கை விவசாய கருத்தரங்கம் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்தில் துவங்கியது.




இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிரிந்தா தேவி, ஆணையாளர் வள்ளலார் ஆந்திரமாநில தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் ஜானகிராம் மற்றும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்சியாளர்கள், முருங்கை மதிப்பு கூட்டு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கருத்தரங்கில் முருங்கை விவசாயத்தில் இலை, பூ, காய் என மூன்றிலும் மதிப்பு கூட்டப்பட்டு உற்பத்தி செய்யப்படும் 100கும் மேற்பட்ட பொருட்கள் கூட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள் முருங்கையின் இலை, பூ, காய் உள்ளிட்டவற்றில் இருந்து இத்தனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்தனர். 




மேலும் இந்த கருத்தரங்கம் குறித்து பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்று ஆராய்சி நிலைய முதல்வர் ஆறுமுகம் கூறுகையில்  சர்வதேச சந்தையில் முருங்கை காய் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்பொழுது முருங்கையின் இலை மேலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் முருங்கையை அதிக ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் உலக சந்தைப்படுத்துதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாகவும், முதல் நாளில் அமெரிக்க, கனடா, ஹாலந்து, பிரேசில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆன்லைனில் மூலம் இந்த கருத்தரங்கல் பங்கேற்றனர் எனவும் மூன்று நாள் கருத்தரங்கின்  முடிவில் முருங்கை விவசாயத்தை மேலும் சர்வதேச அளவில் எடுத்து செல்லவது குறித்து தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!