உயிரிழந்த பள்ளி மாணவன் ராஜேஷ் 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பிற்கான பள்ளி கட்டணம் செலுத்திய நிலையில் சிலம்பாட்டத்தில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
விடுமுறையில் கிணற்றில் குளிக்கச்சென்ற மாணவர்கள்
மதுரை மாநகர் செல்லூர் சர்ச் தெரு பகுதியை சேர்ந்த அழகர்சாமி. இவர் அவனியாபுரத்தில் கோயில் ஒன்றில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரா மற்றும் மகன் ராஜேஷ் உடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அழகர்சாமியின் மகனான ராஜேஷ் (15) என்ற பள்ளி மாணவன் 10- ஆம் வகுப்பு படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் 11 -ஆம் வகுப்பு படிப்பதற்கான பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளனர். இதனிடையே பள்ளி விடுமுறை என்பதால் இன்று காலை தனது நண்பர்கள் 4 பேருடன் ராஜேஷ் குளிக்கச் சென்றுள்ளார்.
கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவன்
மதுரை குலமங்கலம் வடுகபட்டி சாலை பகுதியிலுள்ள தோப்பு ஒன்றில் இருந்த கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது திடிரென கிணற்று நீரில் குதித்தபோது உள்ளே சென்றுள்ளார். அப்போது மற்ற நண்பர்கள் விளையாட்டுக்காக தண்ணீரில் மூழ்கியதாக நினைத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வெளியில் வராத நிலையில் நண்பர்கள் அனைவரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்காமல் ராஜேஷின் பெற்றோருக்கு மூழ்கியதாக தகவல் கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர் அங்கு வருவதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
பதக்கங்களை பெற்ற மாணவன்
உயிரிழந்த பள்ளி மாணவன் ராஜேஷ் 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பிற்கான பள்ளி கட்டணம் செலுத்திய நிலையில் சிலம்பாட்டத்தில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் பள்ளி விடுமுறை நாளில் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா? - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!