உசிலம்பட்டி அருகே பழுதாகி நடுவழியில் நின்ற தனியார் பேருந்தால் பயணிகள் அவதி - தகவலறிந்து நள்ளிரவென்றும் பாராமல் நேரடியாக வந்து உதவி செய்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,-விற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து செக்காணூரணி அருகே மீனாட்சிபட்டி இரயில்வே கேட் அருகில் பழுதாகி நின்றது., சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பழுதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்காமல், பயணிகளுக்கு முறையான பதில்களும் வழங்காமல் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் பயணிகளை தவிக்க வைத்ததாக கூறப்படுகிறது.,
நடுவழியில் தவித்த பேருந்து:
கை குழந்தைகளுடன் பெண்கள், ஆண் பயணிகள் என சுமார் 25க்கும் மேற்பட்டோர் நடுவழியில் தவித்து வந்த நிலையில் தகவலறிந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன்., நள்ளிரவென்றும் பாராமல் நேரடியாக வந்து தனியார் பேருந்து நிர்வாகத்தினரை கண்டித்து விரைந்து பழுதை சரி செய்ய கோரியும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடுவழியில் தவித்த பயணிகளுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்ததோடு, பேருந்து சரி செய்யும் வரை காத்திருந்து பயணிகளை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க - AIADMK vs BJP: புலிகள் போல் தலைவர் இருக்க! புலிகேசியின் ஆதரவு எதற்கு? அதிமுகவை சீண்டிய பாஜக தொண்டர்களின் போஸ்டர்!
எம்.எல்.ஏ.விற்கு பாராட்டுகள்:
மேலும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நள்ளிரவென்றும் பாராமல் நேரடியாக வந்து பொதுமக்களை பாதுகாத்து உதவி செய்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,
இது குறித்து பயணிகள் சிலர் நம்மிடம் தெரிவிக்கையில்..,” பஸ்சில் ஏராளமானோர் பயணித்தோம் பழுது ஏற்பட்ட உடன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தோம். உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் அவர்கள் ஆறுதலாக துணை நின்றது மகிழ்வாக இருந்தது. தனது தொகுதி மக்கள் பிரச்னை இல்லை என்றாலும் தனக்கு தெரிந்த உடன் உதவி செய்ய வந்திருந்தார். அதனால் அவரிடம் பயணிகள் அனைவரும் நன்றியினை தெரிவித்தோம். மேலும் பசியில் இருந்த நபர்களுக்கு தண்ணீர், பிஸ்கட்டுகளை வழங்கி உறவினர்களை போல் விசாரித்தது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்று தெரிவித்தனர்.
உசிலம்பட்டி அருகே பழுதாகி நடுவழியில் நின்ற தனியார் பேருந்தால் பயணிகள் அவதி - தகவலறிந்து நள்ளிரவென்றும் பாராமல் நேரடியாக வந்து உதவி செய்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,-விற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “வீடு கட்ட சொன்னால் சினிமா செட்டிங் போட்டுள்ளனர்” - ரூ.1 கோடியே 70 லட்சம் அபேஸ்: நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - புது மண் சட்டியில் கறிசோறு; மீன் குழம்பு: மழைக்காக ஊர்வலம் சென்ற கிராம மக்கள்: சுவாரஸ்ய நிகழ்வு